இந்தியா-மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சியான ஹரிமாவ் சக்தியின் 4-வது பதிப்பு மலேசியாவின் பகாங் மாவட்டத்தில் உள்ள பென்டாங் முகாமில் இன்று தொடங்கியது. இந்த பயிற்சி 2024 டிசம்பர் 2 முதல் 15 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
78 வீரர்களைக் கொண்ட இந்தியப் படைப்பிரிவில் மஹர் படைப்பிரிவின் ஒரு பிரிவு பங்கேற்கிறது. மலேசிய அரச படைப்பிரிவைச் சேர்ந்த 123 வீரர்கள் மலேசியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கூட்டுப் பயிற்சி ஹரிமாவ் சக்தி என்பது இந்தியாவிலும் மலேசியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ராணுவப்பயிற்சி நிகழ்வாகும். இதற்கு முந்தைய பயிற்சி நவம்பர் 2023-ல் இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உம்ரோய் கன்டோன்மென்ட்டில் நடத்தப்பட்டது.
0 Comments