2024 அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக்கான வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாகும். இந்த விகிதம் செப்டம்பர் மாதத்தில் 3.1 சதவீதமாக இருந்தது. சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 0.9 சதவீதம், 4.1 சதவீதம் மற்றும் 2.0 சதவீதமாகும்.
தொழில்துறையின் உற்பத்திக் குறித்த விரைவான மதிப்பீடுகள் 2023 அக்டோபர் மாதத்தில் 144.9 ஆக இருந்த நிலையில், 2024 அக்டோபரில் இந்த மதிப்பீடுகள் 149.9 ஆக உள்ளது.
0 Comments