மகாராஷ்டிரத்தை சோ்ந்த அவா், இறுதிச்சுற்றில் 252.3 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, தெலங்கானாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். ராஜஸ்தானின் யஷ் வா்தன் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
அதிலேயே ஜூனியா் ஆடவா் இறுதிச்சுற்றில், மகாராஷ்டிரத்தை சோ்ந்த முன்னாள் உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் 254.9 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றாா்.
முன்னதாக இதிலேயே சீனியா் பிரிவில் சீன ஒலிம்பிக் சாம்பியன் ஷெங் லிஹாவ் 254.5 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது ருத்ராங்க்ஷ் அதை முறியடித்திருக்கிறாா். கா்நாடகத்தின் அபிஷேக் சேகா் 251.4 புள்ளிகளுடன் வெள்ளியும், ஹரியாணாவின் ஹிமன்ஷு வெண்கலமும் பெற்றனா்.
அதே ஹிமான்ஷு, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் யூத் பிரிவில் 253 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினாா். மத்திய பிரதேசத்தின் யஷ் பாண்டே வெள்ளியும், மேற்கு வங்கத்தின் அபினவ் ஷா வெண்கலமும் வென்றனா்.
0 Comments