நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனீசியாவின் ஐரீன் சுகந்தரை வீழ்த்தி கொனேரு ஹம்பி இந்த பட்டத்தை வென்றார். இந்த பட்டத்தை அவர் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
இதற்கு முன்பு கொனேரு ஹம்பி 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியில் உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.
கொனேரு ஹம்பிக்கு 37 வயதாகிறது. பெண்கள் பிரிவில், 11 சுற்றுகளுடன் நடைபெறும் இந்த போட்டியில் அவர் 8.5 புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
ஆடவர் பிரிவில் ரஷ்யாவை சேர்ந்த 18 வயதான விலோடர் முர்சின் உலக அதி வேக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார்.
0 Comments