Recent Post

6/recent/ticker-posts

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு / Conch bracelets discovered in Vembakkottai Phase 3 excavation

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு / Conch bracelets discovered in Vembakkottai Phase 3 excavation

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட 16 குழிகளில், உடைந்த நிலையிலான சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் இருந்து சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

3ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் சங்கு வலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதன் மூலமாக முன்னோர்கள் அணிகலன்களுக்கும் அழகிருக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்று அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.

தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel