மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்tட நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுக் கொண்டது.
மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக அஜீத் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
0 Comments