விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணால் ஆன பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
0 Comments