இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் 29.79 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது சேவைகள், கணினி, தொலைத்தொடர்பு மற்றும் பார்மா ஆகிய துறைகளில் உள்ள ஆரோக்கியமான வரவாகும்.
2023-24 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 20.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 43 சதவிகிதம் அதிகரித்து 13.6 பில்லியன் டாலராக இருந்தது.
அதே வேளையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 47.8 சதவிகிதம் அதிகரித்து 16.17 பில்லியன் டாலராக இருந்தது.
2023-24 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் 33.12 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு, இந்த நிதியாண்டின் முதல் பாதியில் 28 சதவிகிதம் அதிகரித்து 42.1 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் மொரீஷியஸ் (5.34 பில்லியன் டாலர்), சிங்கப்பூர் (7.53 பில்லியன் டாலர்), அமெரிக்கா (2.57 பில்லியன் டாலர்), நெதர்லாந்து (3.58 பில்லியன் டாலர்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (3.47 பில்லியன் டாலர்), கேமன் தீவுகள் (235 மில்லியன் டாலர்) மற்றும் சைப்ரஸ் (808 மில்லியன் டாலர்) நேரடி அந்நிய முதலீடு வரத்து அதிகரித்தது. இருப்பினும் ஜப்பான் மற்றும் இங்கிலாந்திலிருந்து நேரடி அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளது.
துறை வாரியாக சேவைகள், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், வர்த்தகம், தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல், பார்மா மற்றும் ரசாயனங்கள் ஆகிய துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடு 5.69 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.85 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
மரபுசாரா எரிசக்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடு 200 கோடி டாலராக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 13.55 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து கர்நாடகாவில் 3.54 பில்லியன் டாலர், தெலுங்கானா 1.54 பில்லியன் டாலர் மற்றும் குஜராத்தில் 4 பில்லியன் டாலர் ஆக இருந்தது
0 Comments