பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரயாக்ராஜ் சென்று, சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனத்தையும், பின்னர் அக்ஷய வத விருட்சத்தில் பூஜையையும், அதைத் தொடர்ந்து அனுமன் மந்திர் மற்றும் சரஸ்வதி கூப்பில் தரிசனம் மற்றும் பூஜையையும் மேற்கொண்டார்.
மஹா கும்பமேளா கண்காட்சி தளத்தில் நடைப்பயணத்தையும் பிரதமர் மேற்கொண்டார். மகா கும்பமேளா 2025க்கான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
பிரயாக்ராஜில் உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்கும் தடையற்ற இணைப்பை வழங்குவதற்கும் 10 புதிய சாலை மேம்பாலங்கள், நிரந்தர படித்துறைகள், ஆற்றங்கரை சாலைகள் போன்ற பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்கள் இதில் அடங்கும்.
0 Comments