கடந்த நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி வளர்ச்சியை குறித்த ஆய்வறிக்கையை எச்எஸ்பிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி துறை பிஎம்ஐ குறியீடு 56.5 என குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் இந்த குறியீடு 57.5 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் உற்பத்தி குறைந்துள்ளதை அறிய முடிகிறது. மேலும், இந்த சரிவு, 11 மாதங்களில் இல்லாத அளவாகும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments