Recent Post

6/recent/ticker-posts

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் இரு செயற்கைக் கோள்களும் சரியான பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் / PSLV C-59 rocket successfully places two satellites on correct trajectory

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் இரு செயற்கைக் கோள்களும் சரியான பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் / PSLV C-59 rocket successfully places two satellites on correct trajectory

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 'நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' அமைப்பு மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து நேற்று டிசம்பர் 4ம் தேதி புதன்கிழமை மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் டிசம்பர் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இறுதிகட்ட சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் சில தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த ராக்கெட் ஏவும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. 

அதன்படி ராக்கெட் ஏவுதல் இன்று டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.04 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பிஎஸ்எல்வி சி-59 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel