Recent Post

6/recent/ticker-posts

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் / PSLV C60 rocket successfully launched

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் / PSLV C60 rocket successfully launched

டிசம்பர் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரவு 10 மணி 15 வினாடிகளுக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட், ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்பட உள்ள ஆய்வுக் கருவிகளையும் தாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. ஸ்பெடெக்ஸ் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-60 (PSLV C-60) ராக்கெட்டில் மொத்தம் 24 ஆய்வுக் கருவிகள் உள்ளன.

போயம்-4 எனப்படும் ராக்கெட்டின் 4வது நிலையில் ஆய்வுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. பிற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்பெடெக்ஸ் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதில் 14 ஆய்வுக் கருவிகளை இஸ்ரோ தயாரித்தவை. சில கல்வி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் எஞ்சிய 10 கருவிகளை உருவாக்கியுள்ளன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, பயோ டெக்னாலஜி உள்ளிட்ட பல துறைகளில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கருவிகள் பிஎஸ்எல்வி சி-60 (PSLV C-60) ராக்கெட்டில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, விண்வெளியின் தாவரங்களை வளர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் பயன்படக்கூடிய கருவிகளும் இத்திட்டத்தில் உள்ளன.

பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035ம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளியில் நிறுவன இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகளை இஸ்ரோ தற்போது துவங்கி உள்ளது.

ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் வெவ்வேறு சுற்றுவட்ட பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel