லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் 155 மிமீ / 52 காலிபர் கே 9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்காக 7,628.70 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
2024-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கே9 வஜ்ரா-டி நவீன ரக பீரங்கிகளை கொள்முதல் மூலம் ராணுவத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு தயார் நிலை மேம்படும். இத்தகைய பீரங்கிகளின் பயன்பாட்டுத் திறன் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புப் படைகளின் திறனை அதிகரிக்கும்.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த துப்பாக்கி பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் செயல்படுவதுடன், துல்லியமாகவும் நீண்ட தூரம் மற்றும் அதிக உயரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமையும் கொண்டதாகும்.
இத்தகைய நடவடிக்கைகள் நான்கு ஆண்டுகளில் ஒன்பது லட்சத்துக்கும் கூடுதலான மனித நாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினரின் பங்களிப்பை ஊக்குவிக்கும். இந்த திட்டம் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' திட்டத்தின் கீழ் தன்னிறைவு இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு உதவும்.
0 Comments