ஃபென்ஜால் புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிக்காக, முதற்கட்டமாக ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில், மத்திய அரசு ரூ.944.80 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில பேரிட நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய குழு அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் தொகை விடுவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
0 Comments