Recent Post

6/recent/ticker-posts

தூத்துக்குடி மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated the Thoothukudi Mini Tidal Park

தூத்துக்குடி மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated the Thoothukudi Mini Tidal Park

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். மீளவிட்டானில் 63,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் ரூ. 32.50 கோடி மதிப்பில் பல்வேறு அம்சங்களுடன் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

கள ஆய்வு மேற்கொள்ள 3 நாள்கள் பயணமாக தூத்துக்குடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக மீளவிட்டானில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்துவைத்தார்.

பல்வகை உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடம், உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel