Recent Post

6/recent/ticker-posts

கலைஞரின் படைப்புலகம் நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin released the artist's book Kalaginar Padaippulagam

கலைஞரின் படைப்புலகம் நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin released the artist's book Kalaginar Padaippulagam

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.12.2024) தலைமைச் செயலகத்தில், எழுத்தாளர் திரு.இமையம் அவர்கள் எழுதிய "கலைஞரின் படைப்புலகம்" நூலினை வெளியிட்டார்

நூற்றாண்டு காணும் ஆளுமைகள் எனும் தலைப்பின்கீழ் புகழ்பெற்ற அரசியல் ஆளுமைகள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து சிறப்பு நூல்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 2022-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் எழுத்தாளர் இமையம் "கலைஞரின் படைப்புலகம்" என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலானது, கலைஞர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள், பயண நூல், திரைக்கதை வசனங்கள், திரையிசை பாடல்கள், நெஞ்சுக்கு நீதி, உரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தொகுப்பாகும்.

இந்நூலில் இந்திய அளவில் புகழ்பெற்ற 19 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்நூலில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் எந்தெந்த ஆண்டு எழுதப்பட்டது என்ற விவரமும் காலவரிசைப்படி வழங்கப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel