தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரினை வெளியிட்டார்.
மேலும், கன்னியாகுமரி பேரூராட்சியில் 44 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் போக்குவரத்து தீவுப் பூங்காவை திறந்து வைத்து, 1.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, கன்னியாகுமரி கடற்கரை சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை எனப் பெயர் சூட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
0 Comments