நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைக்கும், யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசம் சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவை மக்களவையில் இன்று (டிசம்பர் 17) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை மக்களவை சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விதி 74இன் கீழ், இந்த மசோதாவுக்கு ஜேபிசி அமைப்பதை முன்மொழிவதாக தெரிவித்தார்.
இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது
அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
0 Comments