Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் / Governor approves bill to establish Tamil Nadu Highways Authority

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் / Governor approves bill to establish Tamil Nadu Highways Authority

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆணையத்துக்கு ஒரு தலைவா், 3 முழு நேர உறுப்பினா்கள், 3 பகுதி நேர உறுப்பினா்கள் இருப்பா். உறுப்பினா்கள் 62 வயது வரை பணியாற்றலாம்.

நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயா்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம். தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, மாநிலத்துக்கென தனி ஆணையத்தை அமைக்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel