Recent Post

6/recent/ticker-posts

HOUSEHOLD CONSUMPTION EXPENDITURE SURVEY 2023 - 2024 / குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு 2023 - 2024

HOUSEHOLD CONSUMPTION EXPENDITURE SURVEY 2023 - 2024
குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு 2023 - 2024

HOUSEHOLD CONSUMPTION EXPENDITURE SURVEY 2023 - 2024 / குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு 2023 - 2024

TAMIL

HOUSEHOLD CONSUMPTION EXPENDITURE SURVEY 2023 - 2024 / குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு 2023 - 2024: கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இயல்பு நிலைமை திரும்பியுள்ள நிலையில், குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்து கணக்கெடுப்புகளை நடத்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முடிவு செய்தது. 

இதன் அடிப்படையில் முதல் கணக்கெடுப்பு 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஜூலை மாதம் வரை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து 2-வது கணக்கெடுப்பு 2023 ஆகஸ்ட் மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது. இதன் விவரங்கள் அந்த அமைச்சகத்தின் (https://www.mospi.gov.in) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

குடும்ப நுகர்வு செலவின ஆய்வு என்பது குடும்பங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு மற்றும் செலவினம் குறித்த தரவுகளை சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இந்த ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் நுகர்வு, செலவு முறை, வாழ்க்கைத் தரம், குடும்பங்களின் நலவாழ்வு குறித்து புரிந்து கொள்ள வகை செய்கின்றன.

2023-24-ம் ஆண்டிற்கான குடும்ப நுகர்வு செலவினம் குறித்த கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள்

HOUSEHOLD CONSUMPTION EXPENDITURE SURVEY 2023 - 2024 / குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு 2023 - 2024: 2023-24-ம் ஆண்டில் நாட்டில் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் குடும்ப நுகர்வு செலவினத் தொகை சராசரியாக முறையே ரூ.4,122, ரூ.6,996 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம் குடும்பங்களால் இலவசமாகப் பெறப்பட்ட பொருட்களின் மதிப்புகள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

பல்வேறு சமூக நலத் திட்டங்களின் மூலம் இலவசமாகப் பெறப்படும் பொருட்களின் மதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பார்க்கும்போது இந்த மதிப்பீடுகள் ஊரக, நகர்ப்புறங்களில் முறையே ரூ.4,247, ரூ.7,078 ஆக உள்ளது.

2023-24-ம் ஆண்டு மாதாந்திர தனிநபர் குடும்பச் செலவு 9% ஆகவும், நகர்ப்புறங்களில் 8% ஆகவும் அதிகரித்துள்ளது.

மாதாந்திர தனிநபர் குடும்பச் செலவிற்கான நகர்ப்புற-கிராமப்புற இடைவெளி 2011-12-ம் ஆண்டில் 84% ஆக இருந்தது. இது 2022-23-ம் ஆண்டில் 71% ஆகவும், 2023-24-ம் ஆண்டில் 70% ஆகவும் குறைந்துள்ளது.

2023-24-ம் ஆண்டில் கிராமப்புற, நகர்ப்புற குடும்பங்களின் உணவுப் பொருட்கள் தொகுப்பில் பானங்கள், சிற்றுண்டிகள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவை முக்கிய செலவினமாக உள்ளன.

போக்குவரத்து வசதி, உடை, படுக்கை, காலணி, இதர பொருட்கள், பொழுதுபோக்கு, நீடித்து உழைக்கும் பொருட்கள் ஆகியவை கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களின் உணவு அல்லாத செலவினங்களில் பெரும்பங்கு வகிக்கின்றன.

வீட்டு வாடகை, வாகனம் நிறுத்துமிட வாடகை, உணவகம், தங்குமிட கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய வாடகைப்பிரிவு சுமார் 7% பங்களிப்புடன் நகர்ப்புற குடும்பங்களின் உணவு அல்லாத செலவினங்களின் மற்றொரு முக்கிய அங்கமாக உள்ளது.

கிராமப்புற, நகர்ப்புறங்களில் நுகர்வு சமத்துவமின்மை 2022-23-ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 2023-24-ம் ஆண்டில் குறைந்துள்ளது.

பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் அல்லது இதே போன்ற வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களும் பயனாளிகளுக்கு சுகாதார சேவைகளை கட்டணமில்லாமல் வழங்குகின்றன.

ENGLISH

HOUSEHOLD CONSUMPTION EXPENDITURE SURVEY 2023 - 2024: The Ministry of Statistics and Programme Implementation (MoSPI) decided to conduct two consecutive surveys on household consumption expenditure during 2022-23 and 2023-24, once situation normalized after the Covid-19 pandemic.

The first survey was conducted during the period August 2022 to July 2023 and the summary results of the survey in the form of a factsheet was released in February 2024. Subsequently, the detailed report and the unit level data of the survey was released in June 2024.

The fieldwork of the second survey on the subject has been undertaken during August 2023 to July 2024 throughout the entire country. The summary results of the Household Consumption Expenditure Survey: 2023-24 (HCES:2023-24) has been prepared at state and broad item groups level and is being released in the form of a factsheet. The factsheet of HCES:2023-24 is available in the website of the Ministry (https://www.mospi.gov.in).

HCES is designed to collect information on consumption and expenditure of the households on goods and services. The survey provides data required to assess trends in economic well-being and to determine and update the basket of consumer goods and services and weights used for the calculation of the Consumer Price Index. 

Data collected in HCES is also used to measure poverty, inequality, and social exclusion. The Monthly Per Capita Consumption Expenditure (MPCE) compiled from HCES is the primary indicator used for most analytical purposes.

The estimates of MPCE of 2023-24 are based on the data collected from 2,61,953 Households (1,54,357 in rural areas and 1,07,596 in urban areas) in the central sample spread over all States and Union Territories in the country. 

As in HCES:2022-23, in HCES:2023-24 also two sets of estimates of MPCE have been generated: (i) without considering imputed values of items received free of cost by the households through various social welfare programmes and (ii) considering imputed values of items received free of cost by the households through various social welfare programmes. The first set of estimates are presented in Section A while the second ones are presented in Section B.

Important Findings of HCES: 2023-24

HOUSEHOLD CONSUMPTION EXPENDITURE SURVEY 2023 - 2024: The average MPCE in rural and urban India in 2023-24 has been estimated to be Rs. 4,122 and Rs. 6,996, respectively without taking into account of the values of items received free of cost by the households through various social welfare programmes.

Considering the imputed values of items received free of cost through various social welfare programmes, these estimates become Rs. 4,247 and Rs. 7,078 respectively, for rural and urban areas.

In nominal prices, the average MPCE (without imputation) in 2023-24 increases by about 9% in rural areas and 8% in urban areas from the level of 2022-23.

The urban-rural gap in MPCE has declined to 71% in 2022-23 from 84% in 2011-12. It has further come down to 70% in 2023-24 that confirms sustained momentum of consumption growth in rural areas.

When ranked by MPCE, the increase in the average MPCE in 2023-24 from the level of 2022-23 has been the maximum for the bottom 5 to 10 % of India’s population, for both rural and urban areas.

Consistent with the trend observed in HCES:2022-23, non-food items remain the major contributor to the household’s average monthly expenditure in 2023-24 with about 53% and 60% share in MPCE in rural and urban areas respectively.

Beverages, refreshments and processed food continues to have the major expenditure share in 2023-24 in the food items basket of the rural and urban households.

Conveyance, clothing, bedding & footwear, miscellaneous goods & entertainment and durable goods have major expenditure share in non-food expenditure of the households in both rural and urban areas.

Rent consisting of house rent, garage rent and hotel accommodation charges with about 7% share is another major constituent of the urban households’ non-food expenditure.

Consumption inequality, both in rural and urban areas has declined from the level of 2022-23. The Gini coefficient has declined to 0.237 in 2023-24 from 0.266 in 2022-23 for rural areas and to 0.284 in 2023-24 from 0.314 in 2022-23 for urban areas.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel