Recent Post

6/recent/ticker-posts

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சிகை அலங்கார மனித தலை கண்டெடுப்பு / Human Head Toy discovered in Vijayakarishalkulam excavation

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சிகை அலங்கார மனித தலை கண்டெடுப்பு / Human Head Toy discovered in Vijayakarishalkulam excavation

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை-விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 

இவைகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்துள்ளது.

மேலும், சூதுபவள மணிகள், மாவுக் கற்களால் செய்யப்பட்ட உருண்டை-நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல்மணிகள் கிடைத்துள்ளன. 

மேலும், சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது. இவைகள் பண்டைய தமிழர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel