2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 - ம் தேதி அன்று கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் INS விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்கான (SRDD) ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா 2013- ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 - ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஒரு இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும்.
மறுபொருத்தம் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிந்ததும், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பல் மேம்படுத்தப்பட்ட போர் திறனுடன் இந்திய கடற்படையில் சேரும்.
கப்பல் பராமரிப்பு, பழுது பார்த்தல், மாற்றியமைத்தல் (MRO) போன்ற பணிகளை மேற்கொள்ளும் மையமாக செயல்படும் இந்த கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டம் ஒரு முக்கியமான படியாகும்
0 Comments