கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆளில்லா பார்க்கர் விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சைத் தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்தது. இதையடுத்து பல நாட்கள் அதனிடம் இருந்து தொடர்பு இல்லாத சூழல் நிலவியது.
26.12.2024 நள்ளிரவுக்கு சற்று முன்பு (இந்திய நேரப்படி இன்று காலை 10:30 மணியளவில்) விஞ்ஞானிகளுக்கு பார்க்கர் விண்கலத்தில் இருந்து (Parker Solar Probe) சிக்னல் கிடைத்தது.
தற்போது, சூரிய மேற்பரப்பில் இருந்து 61 லட்சம் கி.மீ தொலைவைக் கடந்து சென்றதைத் தொடர்ந்து விண்கலம் "பாதுகாப்பாக உள்ளது" என்றும் சாதாரணமாக இயங்குவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
நாசா இணையதளத்தின்படி, 692,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கலம் 1,800F (980C) வரையிலான வெப்பநிலையைத் தாங்கியுள்ளது.
0 Comments