ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று "எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024" மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள முதலீட்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'நிறைவு, பொறுப்பு, தயார்நிலை' என்பதாகும்.
நீர் பாதுகாப்பு, நீடித்த சுரங்கம், நீடித்த நிதி, அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா, வேளாண் வணிக கண்டுபிடிப்புகள் மற்றும் பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து 12 துறை சார்ந்த கருப்பொருள் அமர்வுகளை இந்த உச்சிமாநாடு நடத்தும்.
'வாழக்கூடிய நகரங்களுக்கான நீர் மேலாண்மை', 'தொழில்களின் பன்முகத்தன்மை உற்பத்தி மற்றும் அதற்கு அப்பால்' மற்றும் 'வர்த்தகம் மற்றும் சுற்றுலா' போன்ற கருப்பொருள்களில் பங்கேற்கும் நாடுகளுடன் எட்டு அமர்வுகளும் இந்த உச்சிமாநாட்டின் போது நடைபெறும்.
வெளிநாடுவாழ் ராஜஸ்தானி மாநாடு, எம்.எஸ்.எம்.இ மாநாடு ஆகியவையும் மூன்று நாட்களில் நடைபெறும். ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தக கண்காட்சியில் ராஜஸ்தான் அரங்கு, உள்நாட்டு அரங்குகள், புத்தொழில் நிறுவன அரங்கு போன்ற கருப்பொருள் அரங்குகள் இடம்பெறும்.
இந்த மாநாட்டில் 16 பங்குதாரர் நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகள் உட்பட 32க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
0 Comments