Recent Post

6/recent/ticker-posts

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024 / இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024
இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024 / இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024

TAMIL

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024 / இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024: 2024 ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்திற்கு முக்கியமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக விளங்கியது. 2023-24 நிதியாண்டில் இந்தியா 8.2% GDP வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது அரசாங்கத்தின் கணிக்கப்பட்ட 7.3% வளர்ச்சியை விட அதிகமாகும்.

இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 47.24 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்த செயல்திறன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பன்முகத்தன்மை, 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஒரு தலைநகரம், அதன் பொருளாதார வலிமையை வரையறுக்கிறது.

இவற்றில் சில மாநிலங்கள் பிராந்திய ரீதியாக மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய மையங்களாக உருவெடுத்துள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஜிஎஸ்டிபி அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை இந்த ஆண்டு பணக்கார மாநிலங்களாக இருந்தன.

நாட்டின் பணக்கார மாநிலம்

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024 / இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024: நாட்டின் பொருளாதார தலைநகராக கருதப்படும் மகாராஷ்டிரா, 2024ல் பணக்கார மாநிலமாக இருந்தது. அதன் மதிப்பிடப்பட்ட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ. 42.67 லட்சம் கோடி.

இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.3% ஆகும். மகாராஷ்டிராவின் பொருளாதார வலிமையின் பெரும்பகுதி அதன் நிதிச் சேவைகள், தொழில்கள் மற்றும் திரைப்படத் துறையில் இருந்து வருகிறது.

மும்பையில் தேசிய பங்குச் சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை போன்ற நிதி நிறுவனங்கள் உள்ளன. ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற நிறுவனங்களின் தலைமையகமும் மும்பையில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் பங்கு

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024 / இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024: ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு, 31.55 லட்சம் கோடி ஜிஎஸ்டிபியுடன் நாட்டின் பணக்கார மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

தமிழ்நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.3.50 லட்சமாக (FY 2023-24), தனிநபர் வருமானத்திலும் வலுவான மாநிலமாக உள்ளது.

அதேநேரம், மாநிலத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதும் நினைவுகூறத்தக்கது. மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், மத்திய அரசின் நிதிப்பங்கீடு போதுமானதாக இல்லை என்பது மாநில அரசின் தொடர் குற்றச்சாட்டுகளாக உள்ளன.

மூன்றாவது இடம்பிடித்த கர்நாடகா

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024 / இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024: ரூ.28.09 லட்சம் கோடி ஜிஎஸ்டிபியுடன் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% பங்களிக்கிறது.

இந்தியாவின் "சிலிகான் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும் பெங்களூர், மாநிலத்தின் பொருளாதார சக்தியின் முக்கிய ஆதாரமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப்கள் மற்றும் கண்டுபிடிப்புகளில் மாநிலம் முன்னணியில் உள்ளது.

நான்காவது இடத்தில் குஜராத்

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024 / இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024: 27.9 லட்சம் கோடி ஜிஎஸ்டிபியுடன் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.1% பங்களிக்கிறது.

மாநிலம் அதன் வலுவான தொழில்துறை அடித்தளம் மற்றும் வணிக சூழலுக்கு பிரபலமானது. பெட்ரோ கெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வைர பாலிஷ் போன்ற துறைகளில் மாநிலம் முன்னணியில் உள்ளது.

மற்ற மாநிலங்களின் விவரங்கள்

  • உத்தரபிரதேசம்: இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்த மாநிலமானது, 24.99 லட்சம் கோடி GSDP மற்றும் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4% பங்களிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், மாநிலத்தின் தனிநபர் வருமானம் ரூ.0.96 லட்சம் மட்டுமே, இது மற்ற உயர்மட்ட மாநிலங்களை விட குறைவாக உள்ளது.
  • மேற்கு வங்கம்: 18.8 லட்சம் கோடி GSDP மற்றும் 5.6% தேசிய பங்களிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
  • தெலுங்கானா: 16.5 லட்சம் கோடி GSDP மற்றும் 4.9% பங்களிப்புடன் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம், இந்தப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம்: 15.89 லட்சம் கோடி GSDP மற்றும் 4.7% பங்களிப்புடன் 8வது இடம்.
  • டெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியின் ஜிஎஸ்டிபி ரூ.11.07 லட்சம் கோடி. இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% பங்களிக்கிறது.

எதிர்கால சாத்தியம்

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024 / இந்தியா GDP வளர்ச்சி குறித்த அறிக்கை 2023 - 2024: எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸின் கூற்றுப்படி, 2030க்குள் இந்தியாவின் பொருளாதாரம் 7 டிரில்லியன் டாலர்களைத் தாண்டும்.

இந்த அதிகரிப்புக்கு பொருளாதார ரீதியாக நாட்டின் முக்கிய மாநிலங்களின் பொருளாதார பங்களிப்பு மற்றும் அவற்றின் உள்கட்டமைப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ENGLISH

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024: The year 2024 was a significant and successful year for the Indian economy. India recorded a GDP growth of 8.2% in the financial year 2023-24, which was higher than the government's projected growth of 7.3%.
With this, India's GDP reached Rs 47.24 lakh crore. This performance has further cemented India's position as the fifth largest economy in the world.

India's diversity, with 28 states, 8 union territories and one capital, defines its economic strength. Some of these states have emerged as major hubs of economic growth not only regionally but also nationally. In terms of GDP and GSDP, Maharashtra, Tamil Nadu and Karnataka were the richest states this year.

The country's richest state

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024: Maharashtra, considered the economic capital of the country, was the richest state in 2024. Its estimated Gross State Domestic Product (GSDP) was Rs. 42.67 lakh crore. This is 13.3% of the national GDP. A large part of Maharashtra's economic strength comes from its financial services, industries and film industry.

Mumbai is home to financial institutions like the National Stock Exchange and the Bombay Stock Exchange. It is noteworthy that companies like Reliance and Tata are also headquartered in Mumbai.

Tamil Nadu's role in the country's economy

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024: Tamil Nadu, known as the Detroit of Asia, is the second richest state in the country with a GSTP of Rs 31.55 lakh crore.

Industries like automobile, textile and information technology contribute significantly to Tamil Nadu's economy. Tamil Nadu's per capita GDP of Rs 3.50 lakh (FY 2023-24) is also a strong state in terms of per capita income.

At the same time, it is worth remembering that the state's debt burden continues to increase. Moreover, despite playing a major role in the country's economy, the state government has been repeatedly alleging that the central government's financial allocation is not sufficient.

Karnataka ranks third

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024: Karnataka is at the third position with a GSDP of Rs 28.09 lakh crore. It contributes 8.2% to the national GDP. Bangalore, known as India's "Silicon Valley", is the main source of the state's economic power. The state is a leader in IT, startups and innovation.

Gujarat ranks fourth

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024: Gujarat ranks fourth with a GSDP of Rs 27.9 lakh crore. It contributes 8.1% to the national GDP. The state is famous for its strong industrial base and business environment. The state is a leader in sectors like petrochemicals, textiles and diamond polishing.

Other states' details

  • Uttar Pradesh: The most populous state in India is at the fifth position with a GSDP of Rs 24.99 lakh crore and contributes 8.4% to the national GDP. However, the state's per capita income is only Rs 0.96 lakh, which is lower than other top-tier states.
  • West Bengal: 6th with GSDP of Rs 18.8 lakh crore and 5.6% national contribution.
  • Telangana: 8th with GSDP of Rs 16.5 lakh crore and 4.9% contribution.
  • Andhra Pradesh: 8th with GSDP of Rs 15.89 lakh crore and 4.7% contribution.
  • Delhi: The GSDP of the capital city of India, Delhi, is Rs 11.07 lakh crore. This contributes 3.6% to the national GDP.

Future Potential

REPORT ON INDIA GDP GROWTH IN 2023 - 2024: According to S&P Global Market Intelligence, India's economy is expected to cross $7 trillion by 2030. This increase can be attributed to the economic contribution of the country's major states and their infrastructure.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel