தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. அப்போது, மாநில அரசுகளின் அனுமதியின்றி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
அதாவது, தமிழகத்தின் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments