தென் கொரியா நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக இயோலுக்கு எதிரான பதவி நீக்க மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா வாக்கெடுப்பில் மொத்த தென் கொரியா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
தென் கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 300. இந்த மசோதாவிற்கு 200 வாக்குகள் இருந்தால் போதுமானது. ஆனால், இன்று கூடிய கூட்டத்தில் இந்த மசோதாவிற்கு 203 வாக்குகள் கிடைத்துள்ளது.
இதனால், யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவின் வாக்கெடுப்பில் இயோலின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்ததால், அப்போது பதவி நீக்கத்தில் இருந்து இயோல் தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments