சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 13 சுற்றுகளில் குகேஷ் - டிங் லிரென் ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 14வது சுற்று இன்று (டிச. 12) தொடங்கியது. இந்தச் சுற்றும் சமநிலையில் முடியும் என்ற நிலையிலேயே இருவரின் ஆட்டமும் நீடித்துவந்தது.
எனினும் போட்டி முடிவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பு 55வது நகர்த்தலில் லிரென் செய்த சிறிய தவறு, குகேஷுக்கு சாதகமாக அமைந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ் 58வது நகர்த்தலில் ஆட்டத்தை முடித்து ஒரு புள்ளியைப் பெற்றார். குகேஷ் 7.5, டிங் லிரென் 6.5 என்ற புள்ளிப் பட்டியலின்படி உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார்.
இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரஷிய வீரர் கேரி காஸ்பரோவ், இதுவரை அந்தப் பெருமை பெற்றிருந்தார். இவர் 22 வயதில் சாம்பியனானார். ஆனால், குகேஷ் இந்த சாதனையை 18 வயதில் முறியடித்துள்ளார்.
0 Comments