தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில், ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது.
ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தொடர்ந்து குலோத்துங்கன் சோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆகியோரால், கோவில் புணரமைத்தாக கல்வெட்டு உள்ளது. கோயிலில் பழமையான கலை நயமிக்க, அழகிய சிலைகளுடன் கூடியவை.
இந்த நிலையில், யுனஸ்கோ ஆசிய - பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு, தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக கோவிலுக்கு சிறப்பு விருதை அறிவித்தது.
0 Comments