தமிழக சட்டப் பேரவையின் 2-ம் நாள் கூட்டம் இன்று (டிச.10) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழக அரசு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் உ.வே.சாமிநாதன் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
0 Comments