Recent Post

6/recent/ticker-posts

VAIKOM AWARD 2024 / வைக்கம் விருது 2024

VAIKOM AWARD 2024
வைக்கம் விருது 2024

VAIKOM AWARD 2024 / வைக்கம் விருது 2024

TAMIL

VAIKOM AWARD 2024 / வைக்கம் விருது 2024: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றப் பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் "வைக்கம் விருது" சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110-இன்கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, 2024-ஆம் ஆண்டிற்கான "வைக்கம் விருது" கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவா அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ மற்றும் சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவா அவர்களுக்கு 5 ட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதலமைச்சர் அவர்களால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (12/12/2024) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்படும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ENGLISH

VAIKOM AWARD 2024: Chief Minister M.K. Stalin announced in the Legislative Assembly, under Rule 110 of the Legislative Assembly, that the "Vaikom Award" will be presented annually by the Tamil Nadu Government on September 17, Social Justice Day, to personalities or institutions that have worked for the welfare of the oppressed in other states and brought about significant change, in memory of Father Periyar, who crossed the border and fought for social justice on 30.03.2023.

In accordance with that announcement, it has been decided to present the "Vaikom Award" for the year 2024 to Devanura Mahadeva, a renowned writer from Mysore district, Karnataka.

Devanura Mahadeva is an eminent writer and social activist. He is very committed to the stance on the linguistic rights of the people. He has also worked against caste-based discrimination and oppression.

He has received various awards such as the Padma Shri, the highest award of the Union Government, and the Sahitya Akademi Award.

Devanura Mahadeva, who has been selected for the Vaikom Award, will be presented with a cheque for Rs 5 lakh, a certificate of appreciation and a gold-plated medal by the Chief Minister at the inauguration ceremony of the Vaikom Memorial in Vaikom, Kerala, tomorrow (12/12/2024), it has been mentioned.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel