குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை 'அறிவின் சிலை'யாகக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு வெள்ளி விழா கொண்டாடவிருக்கிறது.
வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கன்னியாகுமரியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் - கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் - ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள், மாவட்ட நூலகங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments