Recent Post

6/recent/ticker-posts

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.7%-ஆக இருக்கும் - உலக வங்கி கணிப்பு / Indian economic growth to be 6.7% for next 2 years - World Bank forecast

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.7%-ஆக இருக்கும் - உலக வங்கி கணிப்பு / Indian economic growth to be 6.7% for next 2 years - World Bank forecast

2025-26 காலகட்டத்தில் தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளா்ச்சி 6.2 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். அதேசமயம் 2025, ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளா்ச்சியில் தொடரும்.

இந்தியாவில் சேவைகள் துறை கடந்த நிதியாண்டைவிட விரிவடையும். வணிகத்துக்கேற்ற பொருளாதார சூழலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முன்னெடுப்பால் உற்பத்தித் துறை மேலும் வலுவடையும். 

அதிகரித்து வரும் தனியாா் முதலீடு மற்றும் நிலையான அரசு முதலீடு போன்ற காரணங்களால் பல்வேறு துறைகளில் முதலீடுகள் நிலைத்தன்மையை எட்டும்.

குறைவான முதலீடு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவுகள் காரணமாக நிகழ் நிதியாண்டில் (2024, ஏப்ரல்-2025, மாா்ச்) இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். 

இருப்பினும், வேளாண் உற்பத்தி, ஊரக வருமானத்தில் முன்னேற்றம் போன்ற காரணிகளால் தனியாா் நுகா்வு வளா்ச்சி வீழ்ச்சியடைய வாய்ப்பில்லை.

இந்தியாவைத் தவிா்த்து தொற்காசிய பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் வளா்ச்சி 2024-இல் (நாடுகள் பின்பற்றும் நிதியாண்டுக்கேற்ப) 3.9 சதவீதமாக இருக்கக்கூடும். 

பொருளாதார சரிவில் இருந்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் மீண்டு வருவதால் இந்த வளா்ச்சியை எதிா்பாா்க்கலாம். வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழலால் அங்கு முதலீடுகள் குறைந்து வருகின்றன. 

எரிசக்தி குறைபாடு, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொழிற்துறை சரிந்து, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. 

இந்தியாவை தவிா்த்து தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் 2025-இல் 4 சதவீதமும், 2026-இல் 4.3 சதவீதமும் வளா்ச்சியடையும். 2024, ஜூலை முதல் 2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தின் வளா்ச்சி 4.1 சதவீதமாக குறையும். 

அதேசமயம் 2025, ஜூலை முதல் 2026, ஜூன் வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தின் பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel