விண்வெளியில் தனித்தனியாக பறக்கும் இரண்டு வாகனங்கள் அல்லது செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியே டாக்கிங் எனப்படும். இந்த டாக்கிங் பணி என்பது மிகவும் சிக்கலான மற்றும் கடினமான ஒரு பணியாகும்.
இத்தகைய பணியை இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் செய்துள்ளன. அந்த வரிசையில் இணைவதற்காக, இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கிய திட்டம்தான் Spadex Docking Mission.
அதன்படி, 2024 டிசம்பர் 30ம் தேதி, பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம், SDX01(Chaser), SDX02(Target) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
இந்த டாக்கிங் பணி ஏற்கனவே சில நாட்களுக்கு முன் நடைபெற இருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் அந்த பணி நிறுத்தப்பட்டது.
இரண்டு செயற்கைக்கோள்களும் 3 மீட்டர் இடைவெளியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் பின்னோக்கி பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டன.
இந்த நிலையில், இன்று(16.01.24) டாக்கிங் பணியை வெற்றிகரமாக இஸ்ரோ முடித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2 செய்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாகவும், இது ஒரு வரலாற்று தருணம் எனவும் இஸ்ரோ பதிவிட்டுள்ளது.
0 Comments