விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது. விதர்பா மற்றும் கர்நாடகத்துக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, கர்நாடகம் முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய கர்நாடகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரன் ரவிச்சந்திரன் சதம் விளாசி அசத்தினார்.
349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விதர்பா களமிறங்கியது. விதர்பா அணி 48.2 ஓவர்களின் முடிவில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம், 36 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சமரன் ரவிச்சந்திரன் ஆட்ட நாயகனாகவும், கருண் நாயர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
0 Comments