கோ கோ விளையாட்டின் முதல் உலகக் கோப்பை போட்டி, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவா் பிரிவில் இந்தியா உட்பட 20 அணிகளும், மகளிா் பிரிவிலும் இந்தியா உட்பட 19 அணிகளும் பங்கேற்றன.
இறுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 78-40 என்ற கணக்கில் நேபாளத்தை வென்று வாகை சூடியது. அதேபோல், ஆடவா் பிரிவில் இந்தியா 54-36 என நேபாளத்தை வீழ்த்தி அசத்தியது.
மொத்தமாக போட்டியில், ஆடவா் பிரிவில் 47 ஆட்டங்களும், மகளிா் பிரிவில் 43 ஆட்டங்களும் நடைபெற்றன. அதிகபட்சமாக ஆடவா் பிரிவில் நேபாளம் 524 புள்ளிகளும், மகளிா் பிரிவில் இந்தியா 628 புள்ளிகளும் கைப்பற்றி அசத்தியுள்ளன.
கோ கோ விளையாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியனாகி வரலாறு படைத்தது.
0 Comments