Recent Post

6/recent/ticker-posts

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்திய நிறுவனங்கள் மீதான தடை நீக்கம் - அமெரிக்கா அறிவிப்பு / US lifts sanctions on 3 Indian institutions including Indira Gandhi Institute of Atomic Energy - announcement

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தற்போதுள்ள அதிபர் ஜோ பைடன் நிர்வாகமானது இந்தியாவின் 3 நிறுவனங்களுக்கு எதிரான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ''பனிப்போர் காலத்தின்போது இந்தியாவை சேர்ந்த இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், இன்டியன் ரேர் எர்த்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுபோன்று மேம்பட்ட எரிசக்தி ஒத்துழைப்புக்கான தடைகளை குறைப்பது அமெரிக்க வெளியுறவு கொள்கையின் நோக்கத்துக்கு ஆதரவாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு முரணான செயல்களுக்காக சீன நாட்டை சேர்ந்த 11 நிறுவனங்கள் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel