பூமியிலிருந்து சுமார் 430 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், சிம்ம ராசி விண்மீன் கூட்டத்தில், என்ஜிசி 3785 பால்வெளியில் விண்மீன் திரள்களுக்கு விண்மீன்களுக்கு இடையேயான வாயுக்களின் நீண்ட, மெல்லிய நீரோட்டமான அலை வால் முடிவில் ஒரு புதிய வகை பால்வெளி உருவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
என்ஜிசி 3785 பால்வெளி மற்றும் அதன் அண்டை பால்வெளி இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையால் புதிய பால்வெளி உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
பால்வெளியின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். என்ஜிசி 3785 விண்மீன் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பால்வெளிகளில் மிக நீண்ட அலை வால் கொண்டதாக அறியப்படுகிறது.
பால்வெளியில் இருந்து வால் பகுதி விரிவடைந்து உள்ளது. இரண்டு பால்வெளிகள் நெருக்கமாக வரும்போது ஈர்ப்பு விசைகளால் ("அலை ஆற்றல்கள்") இந்த வகை வால் பகுதி உருவாகிறது.
இரண்டு பால்வெளிகள் நெருக்கமாக தொடர்பு கொள்ளும்போது, ஒவ்வொன்றில் இருந்தும் பொருட்கள் இழுக்கப்படும் போது இவ்வாறான வால் பகுதி உருவாகிறது.
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான இந்திய வான்இயற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை என்ஜிசி 3785 விண்மீன் மண்டலம் ஈர்த்துள்ளது.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிக நீண்ட அலைவால் கொண்ட விண்மீனாக மட்டுமின்றி அந்த வால் பகுதியின் முடிவில் தற்போது ஒரு புதிய பால்வெளி உருவாகி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
0 Comments