38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீச்சலில் ஆடவா் 100 மீ. பட்டா்பிளை பிரிவில் தமிழக வீரா் ரோஹித் பெனடிக்டன் தங்கம் வென்றாா். இது தேசிய போட்டிகளில் முதல் தங்கப் பதக்கமாக அமைந்தது.
அதே போல் 4-00 மீ ப்ரிஸ்டைல் ஆடவா் பிரிவில் தமிழக அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. மகளிா் 4-100 மீ ப்ரிஸ்டைல் பிரிவில் தமிழகம் வெண்கலம் வென்றது. அதே போல் கலப்பு அணிகள் ட்ரையத்லான் பிரிவிலும் வெண்கலம் வென்றது.
இதில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் நர்மதா நித்தின் ராஜூ தங்கப் பதக்கம் வென்றார்.
களரிபயட்டுவில் தமிழகம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. நீச்சலில் மகளிருக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநிதி நடேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார்
0 Comments