2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணின் வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதமாகும். இது 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3.5 சதவீதமாக (விரைவான மதிப்பீடு) இருந்தது.
2024 ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 1.9 சதவீதம், 5.8 சதவீதம் மற்றும் 4.4 சதவீதமாகும்.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணின் விரைவான மதிப்பீடுகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 141.1 -ஆக இருந்தது. இது 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 148.4 ஆக உள்ளது.
2024 ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீட்டு எண்கள் முறையே 133.8, 147.4 மற்றும் 184.1 ஆக உள்ளன.
0 Comments