2025 பிப்ரவரி 7 முதல் 14 வரை சீனாவின் ஹார்பினில் நடைபெறவிருக்கும் 9-வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் (AWG)- 2025-ல் இந்திய அணியின் பங்கேற்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், 59 விளையாட்டு வீரர்கள், 29 குழு அதிகாரிகள் உட்பட 88 இந்திய பிரதிநிதிகள் பங்கேற்க அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல் முறையாக, ஆல்பைன் ஸ்கீயிங், ஃபிகர் ஸ்கேட்டிங், ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கீயிங், ஸ்பீடு ஸ்கேட்டிங் (லாங் டிராக்) ஆகியவற்றில் போட்டியிடும் விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி திட்டத்தின் கீழ் முழு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த குறிப்பிடத்தக்க முடிவு குளிர்கால விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும், இந்திய விளையாட்டு வீரர்கள் ஆசியாவின் மிக உயர்ந்த நிலைகளில் போட்டியிட வாய்ப்புகளை வழங்குவதற்குமான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள், இந்திய வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிடவும் ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது. இது எதிர்கால உலகளாவிய போட்டிகளுக்கு தளத்தை அமைக்கும்.
0 Comments