அதன்படி, வரும் 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.
இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி வந்தது.
ஏராளமான உயிர்கள் பலிக் கொடுக்கப்பட்டதுடன், கடும் பொருட்சேதங்களை ஏற்படுத்திய இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன.
பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த வேளையில், இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்தம் குறித்து இறுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிடம் இருக்கும் பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதால், 15 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது.
0 Comments