Recent Post

6/recent/ticker-posts

சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார் / Indus Valley Civilization Discovery International Seminar - Chief Minister M.K. Stalin inaugurated

தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இந்தக் கருத்தரங்கு எழும்பூா் அரசு அருங்காட்சியக கலையரங்கில் இன்று முதல் ஜன. 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு’ என்ற நூலையும் முதல்வா் வெளியிட்டு உரையாற்றவுள்ளாா்.

3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த 24 ஆய்வாளா்கள் தொல்லியலாளா்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் இதர நாகரிகங்கள், பண்பாடுகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் தங்களது ஆய்வுரைகளை வழங்கவுள்ளனா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel