LIST OF COUNTRIES WITH LONGEST WORKING HOURS 2024
அதிக நேரம் வேலை செய்பவர்கள் நாடுகள் பட்டியல் 2024
TAMIL
LIST OF COUNTRIES WITH LONGEST WORKING HOURS 2024 / அதிக நேரம் வேலை செய்பவர்கள் நாடுகள் பட்டியல் 2024: முதலிடம் பெற்றுள்ள பூட்டானில் உள்ள ஊழியர்கள் வாரத்திற்கு சுமார் 54.4 மணி நேரம் வேலை செய்கிறார்கள். 2வது இடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெற்றுள்ளது. இங்குள்ள ஊழியர்கள் வாரத்திற்கு 50.9 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.
3வது இடத்தில் ஆப்பிரிக்க நாடான லெசோதோ உள்ளது. இங்குள்ளவர்கள் வாரத்திற்கு 50.4 மணிநேரம் வேலை செய்கிறார்கள். 4வது இடத்தில் காங்கோ உள்ளது. இங்குள்ள ஊழியர்கள் வாரத்திற்கு 48.6 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
5வது இடத்தில் 48 மணி நேரம் வேலை செய்யும் பட்டியலில் கத்தார் அடுத்த இடத்தில் உள்ளது. 6வது இடத்தில் லைபீரியா உள்ளது. அங்கு ஊழியர்கள் வாரத்திற்கு 47.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.
7வது இடத்தை மவுரித்தேனியா பெறுகிறது, அங்கு மக்கள் வாரத்திற்கு 47.6 மணிநேரம் வேலை செய்கிறார்கள். 8வது இடத்தில் லெபனான் உள்ளது. அங்கு மக்கள் வாரத்திற்கு சராசரியாக 47.6 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.
9வது இடத்தில் மங்கோலியா உள்ளது. ஊழியர்கள் வாரத்திற்கு 47.3 மணிநேரம் வேலை செய்கிறார்கள். 10வது இடத்தில், ஜோர்டான் உள்ளது, அங்குள்ள மக்கள் வாரத்திற்கு சராசரியாக 47 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
இதற்கிடையில், ஐ.எல்.ஓ., தரவுகளின்படி, ஒரு வேலை செய்பவருக்கு மிகக் குறைந்த சராசரி வேலை நேரங்களைக் கொண்ட நாடாக தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு உருவெடுத்துள்ளது.
வனுவாட்டுவில் ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 24.7 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். இது பகுப்பாய்வு செய்யப்பட்ட எந்த நாடுகளிலும் மிகக் குறைவு. கிரிபாட்டி (27.3 மணிநேரம்) மற்றும் மைக்ரோனேஷியா (30.4 மணிநேரம்) போன்ற நாடுகளும் குறைந்தபட்ச கூடுதல் நேரத்துடன் தங்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
உலகின் அதிக வேலை செய்யும் நாடுகளில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. இந்திய ஊழியர்கள் சராசரியாக ஒவ்வொரு வாரமும் 46.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்றும், இந்திய தொழிலாளர்களில் 51சதவீதம் பேர் வாரத்திற்கு 49 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வேலை செய்கிறார்கள் இதன் மூலம், அதிக வேலை நேர விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நெதர்லாந்து தொழிலாளர்கள் வாரத்திற்கு 31.6 மணிநேரமும் நார்வேயில் 33.7 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்.
ENGLISH
LIST OF COUNTRIES WITH LONGEST WORKING HOURS 2024: Employees in Bhutan, which has taken the top spot, work an average of 54.4 hours per week. The United Arab Emirates comes in second place. Employees here work an average of 50.9 hours per week.
In third place is the African country of Lesotho. People here work an average of 50.4 hours per week. In fourth place is Congo. Employees here work an average of 48.6 hours per week.
Qatar comes in fifth place, with 48 hours per week. In sixth place is Liberia. Employees there work an average of 47.7 hours per week. In seventh place is Mauritania, where people work an average of 47.6 hours per week.
In eighth place is Lebanon. People there work an average of 47.6 hours per week. In ninth place is Mongolia. Employees work an average of 47.3 hours per week. In 10th place, Jordan is the country with the lowest average working hours per worker, according to ILO data.
Vanuatu, an island nation in the South Pacific, has emerged as the country with the lowest average working hours per worker. Employees in Vanuatu work an average of just 24.7 hours per week.
This is the lowest of any country analyzed. Countries like Kiribati (27.3 hours) and Micronesia (30.4 hours) also seem to be living their best lives with minimal overtime.
India is ranked 13th among the world’s most overworked countries. Indian employees work an average of 46.7 hours each week, and 51 percent of Indian workers work 49 hours or more per week, making India the second-highest working-hour country in the world.
Among European countries, workers in the Netherlands work 31.6 hours per week, while in Norway, they work 33.7 hours.
0 Comments