ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கு மத்திய அரசின் தேசிய சுகாதார ஆணையத்திற்கும் ஒடிசா அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தத் திட்டம் குறைந்த கட்டணத்தில், ஒடிசாவின் மகளிர் மற்றும் முதியோருக்கு உயர்தர சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்யும். ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தை செயல்படுத்திய 34-வது மாநிலமாக ஒடிசா இணைந்துள்ளது.
இதன் மூலம் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 1.03 கோடி குடும்பங்கள் பயனடையும். ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் வரும், 67.8 லட்சம் குடும்பங்கள் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடையும்.
0 Comments