Recent Post

6/recent/ticker-posts

NATIONAL SPORTS AWARDS 2024 / தேசிய விளையாட்டு விருது 2024

NATIONAL SPORTS AWARDS 2024 / தேசிய விளையாட்டு விருது 2024

TAMIL

NATIONAL SPORTS AWARDS 2024 / தேசிய விளையாட்டு விருது 2024: 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 2025 ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார்.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்குப் பிறகும், கீழ்க்கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது 2024

  1. திரு குகேஷ் டி - சதுரங்கம்
  2. திரு ஹர்மன்பிரீத் சிங் - ஹாக்கி
  3. திரு பிரவீன் குமார் - பாரா தடகளம்
  4. திருமதி மனு பாக்கர் - துப்பாக்கி சுடுதல்

விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்திறனுக்கான அர்ஜுனா விருதுகள் 2024

  1. திருமதி ஜோதி யர்ராஜி - தடகளம்
  2. திருமதி அன்னு ராணி - தடகளம்
  3. செல்வி நிது - குத்துச்சண்டை
  4. திருமதி சவீட்டி - குத்துச்சண்டை
  5. செல்வி வந்திகா அகர்வால்  - சதுரங்கம்
  6. திருமதி சலீமா டேட் - ஹாக்கி
  7. திரு அபிஷேக் - ஹாக்கி
  8. திரு சஞ்சய் - ஹாக்கி
  9. திரு ஜர்மன்பிரீத் சிங் - ஹாக்கி
  10. திரு சுக்ஜீத் சிங் - ஹாக்கி
  11. திரு ராகேஷ் குமார் - பாரா வில்வித்தை
  12. செல்வி ப்ரீத்தி பால் - பாரா தடகளம்
  13. செல்வி ஜீவன்ஜி தீப்தி - பாரா தடகளம்
  14. திரு அஜீத் சிங் - பாரா தடகளம்
  15. திரு சச்சின் சர்ஜேராவ் கிலாரி - பாரா தடகளம்
  16. திரு தரம்பீர் - பாரா தடகளம்
  17. திரு பிரணவ் சூர்மா - பாரா தடகளம்
  18. திரு எச் ஹோகடோ செமா - பாரா தடகளம்
  19. திருமதி சிம்ரன் - பாரா தடகளம்
  20. திரு நவ்தீப் - பாரா தடகளம்
  21. திரு நிதேஷ் குமார் - பாரா பேட்மிண்டன்
  22. திருமதி துளசிமதி முருகேசன் - பாரா பேட்மிண்டன்
  23. திருமதி நித்யா ஸ்ரீ சுமதி சிவன் - பாரா பேட்மிண்டன்
  24. திருமதி மனிஷா ராமதாஸ் - பாரா பேட்மிண்டன்
  25. திரு கபில் பார்மர் - பாரா-ஜூடோ
  26. திருமதி மோனா அகர்வால் - பாரா துப்பாக்கிச் சுடுதல்
  27. திருமதி ரூபினா பிரான்சிஸ் - பாரா துப்பாக்கிச் சுடுதல்
  28. திரு ஸ்வப்னில் சுரேஷ் குசலே - துப்பாக்கிச் சுடுதல்
  29. திரு சரப்ஜோத் சிங் - துப்பாக்கிச் சுடுதல்
  30. திரு அபய் சிங் - ஸ்குவாஷ்
  31. திரு சாஜன் பிரகாஷ் - நீச்சல்
  32. திரு அமன் - மல்யுத்தம்

விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்திறனுக்கான அர்ஜுனா விருதுகள் (வாழ்நாள்) 2024

  1. திரு சுச்சா சிங் - தடகளம்
  2. திரு முரிகாந்த் ராஜாராம் பேட்கர் - பாரா நீச்சல்

விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 2024

  1. திரு சுபாஷ் ராணா - பாரா துப்பாக்கிச் சுடுதல்
  2. செல்வி தீபாலி தேஷ்பாண்டே - துப்பாக்கிச் சுடுதல்
  3. திரு சந்தீப் சங்க்வான் - ஹாக்கி

வாழ்நாள் வகை

  1. திரு எஸ் முரளிதரன் - பூப்பந்தாட்டம்
  2. திரு அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ - கால்பந்தாட்டம்

ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார்

  1. இந்திய உடற்கல்வி அறக்கட்டளை

மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) கோப்பை 2024

  1. சண்டிகர் பல்கலைக்கழகம்
  2. லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகம்
  3. குரு நானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ்
விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து பரிசளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் ஒரு விளையாட்டு வீரர் சிறப்பாக செயல்பட்டதற்காக 'மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், தலைமைப் பண்பு, விளையாட்டுத் திறன் மற்றும் ஒழுக்க உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காகவும் 'விளையாட்டு மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்த செயல்திறனுக்கான அர்ஜுனா விருது' வழங்கப்படுகிறது.

அர்ஜுனா விருது (வாழ்நாள்) விளையாட்டு வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் விளையாட்டில் தங்கள் செயல்திறன் மூலம் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் விளையாட்டு வீரர்களை கௌரவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் வழங்கப்படுகிறது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு 'துரோணாச்சார்யா விருது' வழங்கப்படுகிறது.

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக முதலிடம் வகிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மகா) கோப்பை வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்பட்டன மற்றும் விளையாட்டு வீரர்கள் / பயிற்சியாளர்கள் / நிறுவனங்கள் ஒரு பிரத்யேக ஆன்லைன் போர்ட்டல் மூலம் சுயமாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டன. 

இந்த ஆண்டு இந்த விருதுகளுக்காக ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அவை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டன, மேலும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், விளையாட்டு இதழியலில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.


ENGLISH

NATIONAL SPORTS AWARDS 2024: Ministry of Youth Affairs & Sports announced the National Sports Awards 2024 today. The awardees will receive their awards from the President of India at a specially organized function at Rashtrapati Bhavan on 17th January, 2025 (Friday) at 1100 hours.

Based on the recommendations of the Committee and after due scrutiny, Government has decided to confer awards upon the following sportspersons, coaches, university and entity.

Major Dhyan Chand Khel Ratna Award 2024

  1. Shri Gukesh D - Chess
  2. Shri Harmanpreet Singh - Hockey
  3. Shri Praveen Kumar - Para-Athletics
  4. Ms. Manu Bhaker - Shooting

Arjuna Awards for outstanding performance in Sports and Games 2024

  1. Ms. Jyothi Yarraji - Athletics
  2. Ms. Annu Rani - Athletics
  3. Ms. Nitu - Boxing
  4. Ms. Saweety - Boxing
  5. Ms. Vantika Agrawal - Chess
  6. Ms. Salima Tete - Hockey
  7. Shri Abhishek - Hockey
  8. Shri Sanjay - Hockey
  9. Shri Jarmanpreet Singh - Hockey
  10. Shri Sukhjeet Singh - Hockey
  11. Shri Rakesh Kumar - Para-Archery
  12. Ms. Preeti Pal - Para-Athletics
  13. Ms. Jeevanji Deepthi - Para-Athletics
  14. Shri Ajeet Singh - Para-Athletics
  15. Shri Sachin Sarjerao Khilari - Para-Athletics
  16. Shri Dharambir - Para-Athletics
  17. Shri Pranav Soorma - Para-Athletics
  18. Shri H Hokato Sema - Para-Athletics
  19. Ms. Simran - Para-Athletics
  20. Shri Navdeep - Para-Athletics
  21. Shri Nitesh Kumar - Para-Badminton
  22. Ms. Thulasimathi Murugesan - Para-Badminton
  23. Ms. Nithya Sre Sumathy Sivan - Para-Badminton
  24. Ms. Manisha Ramadass - Para-Badminton
  25. Shri Kapil Parmar - Para-Judo
  26. Ms. Mona Agarwal - Para-Shooting
  27. Ms. Rubina Francis - Para-Shooting
  28. Shri Swapnil Suresh Kusale - Shooting
  29. Shri Sarabjot Singh - Shooting
  30. Shri Abhay Singh - Squash
  31. Shri Sajan Prakash - Swimming
  32. Shri Aman - Wrestling

Arjuna Awards (Lifetime) for outstanding performance in Sports and Games 2024

  1. Shri Sucha Singh - Athletics
  2. Shri Murlikant Rajaram Petkar - Para-Swimming

Dronacharya Award for outstanding coaches in Sports and Games 2024

Regular Category

  1. Shri Subhash Rana - Para-Shooting
  2. Ms. Deepali Deshpande - Shooting
  3. Shri Sandeep Sangwan - Hockey

Lifetime Category

  1. Shri S Muralidharan - Badminton
  2. Shri Armando Agnelo Colaco - Football

Rashtriya Khel Protsahan Puraskar

  1. Physical Education Foundation of India

Maulana Abul Kalam Azad (MAKA) Trophy 2024

  1. Chandigarh University - Overall winner University
  2. Lovely Professional University, (PB) - 1st runner up University
  3. Guru Nanak Dev University, Amritsar - 2nd runner up University

National Sports Awards are given every year to recognize and reward excellence in sports. ‘Major Dhyan Chand Khel Ratna Award’ is given for the spectacular and most outstanding performance in the field of sports by a sportsperson over the period of the previous four years.

‘Arjuna Award for outstanding performance in Sports and Games’ is given for good performance over a period of the previous four years and for showing qualities of leadership, sportsmanship and a sense of discipline.

Arjuna Award (Lifetime) is given to honour and motivate those sportspersons who have contributed to sports by their performance and continue to contribute to promotion of sports even after their retirement from active sporting career.

‘Dronacharya Award for outstanding coaches in Sports and Games’ is given to coaches for doing outstanding and meritorious work on a consistent basis and for enabling sportspersons to excel in International events.

The overall top performing university in Khelo India University Games is given the Maulana Abul Kalam Azad (MAKA) Trophy.

The applications were invited online and sportspersons/coaches/entities were permitted to self-apply through a dedicated Online Portal. A large number of applications were received for these awards this year, which were considered by the Selection Committee headed by Justice (Retd.) V. Ramasubramanian, Supreme Court of India and consisting members from eminent sportspersons, persons having experience in sports journalism and sports administrators.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel