இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, தில்லி மற்றும் உத்தராகண்ட் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமனம் செய்துள்ளார்.
அதன்படி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் அஜய் திக்பால், ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோரும், உத்தராகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதித்துறை அதிகாரி ஆஷிஷ் நைதானியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments