NITI AAYOG REPORT ON STATES WITH STRONG FISCAL POSITION 2022 - 2023
வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்களின் நிதி ஆயோக் அறிக்கை 2022 - 2023
TAMIL
NITI AAYOG REPORT ON STATES WITH STRONG FISCAL POSITION 2022 - 2023 / வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்களின் நிதி ஆயோக் அறிக்கை 2022 - 2023: நாட்டின் திட்டமிடலுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான நிதி ஆயோக் மாநிலங்களின் நிதிநிலை குறித்த விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கை அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கை செலவினங்கள் பயனுள்ளதாக இருந்ததா, வருவாய் திரட்டும் நடைமுறைகள், அரசு தன் நிதி நிலையை சீராக பராமரிப்பதில் கவனம் செலுத்தியதா, கடன் வாங்குவது கட்டுக்குள் இருந்ததா என்பன உள்ளிட்ட அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
பல்வேறு கணக்கீடுகள் படி ஒடிசா மாநிலம் 67.8 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. சத்தீஸ்கர் 55.2 மதிப்பெண்களுடன் 2ஆம் இடத்திலும் கோவா 53.6 மதிப்பெண்களுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.
ஜார்க்கண்ட் 51.6 மதிப்பெண்களுடன் 4ஆம் இடத்திலும் குஜராத் 50.5 மதிப்பெண்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன. மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகியவை 6 முதல் 10 இடங்களில் உள்ளன.
தமிழ்நாடு 29.2 மதிப்பெண்களுடன் 11ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், பீகார், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்கள் 12 முதல் 15 இடங்களில் இருக்கின்றன. மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளன.
18 மாநிலங்கள் கொண்ட இப்பட்டியலில் மாநிலங்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம் 3ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இப்பட்டியல்படி மேற்கு வங்காளம், பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது தெரியவருகிறது.
ENGLISH
NITI AAYOG REPORT ON STATES WITH STRONG FISCAL POSITION 2022 - 2023: The country's planning body, NITI Aayog, has released a comprehensive report on the financial position of the states.
The report has been prepared based on the Central Audit Officer's report. This report for the year 2022-23 took into account aspects such as whether expenditure was effective, revenue collection practices, whether the government focused on maintaining its financial position, and whether borrowing was under control.
According to various calculations, Odisha is at the top with a score of 67.8. Chhattisgarh is at the second place with a score of 55.2 and Goa is at the third place with a score of 53.6.
Jharkhand is at the fourth place with a score of 51.6 and Gujarat is at the fifth place with a score of 50.5. Maharashtra, Uttar Pradesh, Telangana, Madhya Pradesh, and Karnataka are at the sixth to 10th place.
Tamil Nadu is at the 11th place with a score of 29.2. Rajasthan, Bihar, Haryana and Kerala are in 12th to 15th positions. West Bengal, Andhra Pradesh and Punjab are in the last 3 positions.
In this list of 18 states, the states are classified into 4 categories, and Tamil Nadu is in the 3rd category. According to this list, the financial condition of the states of West Bengal, Punjab and Andhra Pradesh is very bad.
0 Comments