பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
ஜே.ஜே தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த பிரதமர், தில்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியான பயனாளிகளுக்கு சாவிகளையும் வழங்கினார்.
நவ்ரோஜி நகரில் உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் பொதுத் தொகுப்பு குடியிருப்பு (ஜிபிஆர்ஏ) வகை-2 குடியிருப்புகள் ஆகிய இரண்டு நகர்ப்புற மறுமேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
0 Comments