பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரெயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.
புதிய ஜம்மு ரயில்வே கோட்டப் பிரிவை பிரதமர் தொடங்கி வைத்தார். தெலுங்கானாவின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள சார்லபள்ளி புதிய முனைய நிலையம் சுமார் 413 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது நுழைவு வசதியுடன் புதிய பயிற்சி முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
0 Comments